கோவில்பட்டி பழனி ஆண்டவர் கோவில் தெருவில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கலந்தாய்வு கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் கலந்துகொண்டு சட்டமன்ற தொகுதியில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து கலந்துரையாடல் நடத்தினார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.