திருப்புல்லாணி அருகே உள்ள களிமண்குண்டு ஊராட்சிக்குட்பட்ட சல்லித்தோப்பு கடற்கரை பகுதியில் ஏராளமான பனை மரங்கள் நேற்று ஒரே நாளில் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. இது குறித்து விசாரித்த போது மாவட்ட கலெக்டரின் அனுமதி பெறாமல் இந்த பனை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளது மேலும் பனை மரங்களை பதிவெண் இல்லாத டிராக்டர் மற்றும் வாகனங்களில் ஏற்றிக்கொண்டு செல்லப்பட்டதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர்.