தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் திருச்சி மரக்கடை பகுதியில் இன்று மதியம் பிரச்சாரம் மேற்கொண்டார் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அந்த இடத்திற்கு காலை 6 மணி முதல் இருந்து தொண்டர்கள் வர துவங்கி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் அங்கு குழுமியிருந்தனர். அப்பகுதியில் சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த தொண்டர்கள் விஜய் அப்பகுதிக்கு வந்தவுடன் கூட்ட நெரிசலில் சிக்கி தங்களது காலணிகளை விட்டுச் சென்றனர் அங்கிருந்து பொருட்கள் ஏராளமானவை சேதமடைந்தன.