தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் செப்டம்பர் 13ஆம் தேதி பெரம்பலூரில் தேர்தல் பரப்புரை மேற்கொள்வதாக அறிவித்துவிட்டு நள்ளிரவு ஒரு மணி ஆகியும் வராமல் பிரச்சார வாகனத்துடன் திருச்சி சென்று விட்டார். இதனால் காத்திருந்த தவெக தொண்டர்களும் பொதுமக்களும் கடும் அதிர்ச்சி அடைந்து ஏமாற்றத்துடன் சென்றனர், இதனை கண்டித்து பெரம்பலூர் நகரப் பகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது