கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு தேவையான குடியிருப்பு சான்றிதழ் ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் வாங்குவதற்கு அலை கழிக்கப்படுவதாக கூறி பாரதிய ஜனதா கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணைத்தலைவர் சித்ரா தலைமையில் கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சார் ஆட்சியரிடம் மனு வழங்கினர் தொடர்ந்து விரைவில் பொதுமக்களுக்கு சான்றிதழ்கள் தடை இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.