கோயமுத்தூரை சேர்ந்த ரோகித் என்பவர் மெடிக்கல் ரெப்பாக பணியாற்றி வரும் நிலையில் கோயம்புத்தூரில் இருந்து வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது ஆம்பூர் அடுத்த ஜமீன் பகுதியில் இன்று விடியற்காலை கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் தலைகீழாக கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் ரோகித் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். கார்ஓட்டுநர் சிறுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இந்த விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.