தமிழ்நாட்டில் தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் உள்ளிட்ட 38 சுங்க சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து சுங்க சாவடிகளிலும் கட்டணம் உயர்ந்ததால், ஒரு முறை பயணத்திற்கு தற்போது 95 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.