புதிய தமிழகம் கட்சியின் 7வது மாநில மாநாடு 2026 ஜனவரி 7ம் தேதி மதுரையில் நடக்கவுள்ளது. அது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது இதில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்ததாவது வி.சி.க., திருமாவளவன் தனது கடமையை மறந்துவிட்டு புரோக்கர் போல் செயல்படுகிறார். பாதிக்கப்பட்டவர்கள் உடன் நிற்காமல் போராட்ட குணத்தை மழுங்கடித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார் என தெரிவித்தார்