இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு, 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டதன் காரணமாக, திருப்பூர் ஆயத்த ஆடை பின்னலாடை துறை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசை கண்டித்தும், அமெரிக்கா அரசை கண்டித்தும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நேற்று நடத்திய போராட்டத்தில், ட்ரம்ப் புகைப்படம் கிழிக்கப்பட்டு, அமெரிக்க குளிர்பானங்கள் சாலையில் ஊற்றப்பட்டது.