திருப்பத்தூர் ஒன்றியம் நெல்லிவாசல் நாடு ஊராட்சி புலியூர் பகுதியில் உள்ள பட்டுப்பூச்சி வளர்ச்சி மையம் கடந்த பத்து ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இல்லாமல் பட்டுப்பூச்சி மையம் செயல்படாமல் உள்ளது. இதனை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை தலைவர் ராஜா பெருமாள் இன்று கலெக்டர் சிவ செளந்திரவல்லி இடம் கோரிக்கை மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.