தஞ்சாவூரில் நடந்த கட்சி நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த திருச்சி எம்பி துரை வைகோ நிருபர்களிடம் கூறுகையில், மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பு வரவேற்கத்தக்கது. ஆனால் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது இது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. டிடிவி தினகரன் பிஜேபியுடன் எதற்காக கூட்டணி வைத்தார். இதற்காக பிரிந்தார் என்பது புரியாத புதிராக உள்ளது என்றார்.