பரமக்குடி பேருந்து நிலையத்திலிருந்து வீரசோழன் பகுதிக்கு சென்ற டவுன் பஸ் திருவரங்கி பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் பயணிகளை ஏற்றுக்கொண்டு புறப்பட்ட போது ராமநாதபுரத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த மற்றொரு அரசு பேருந்து முன்னாள் சென்ற டவுன் பஸ் மீது வேகமாக மோதியது. இதில் ஒரு அரசு பேருந்து சென்டர் மீடியனைத் தாண்டி மற்றொரு பக்கம் நின்றது. இதில் இரண்டு அரசு பேருந்துகளும் பலத்த சேதம் அடைந்தன. இரண்டு அரசு பேருந்துகளிலும் பயணித்து சுமார் 20 பயணிகள் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்