மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தை திருச்சியில் மூன்று நாட்கள் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டு வருகிறார் அந்த வகையில் இன்று திருச்சி மணப்பாறை திருச்சி மேற்கு ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் இந்நிலையில் திருச்சி மேற்கு தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்கும் விதமாக வைக்கப்பட்ட பேனரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.