ராயபுரம் சிமெண்ட் ரோடு பகுதியில் கடந்த 53 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சிதலமடைந்து பழைய நிலையில் உள்ளதை புதியதாக கட்டுவதற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் இதனை அடுத்து இன்று ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மின்சார வாரிய அதிகாரிகள் தாசில்தார் ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் பகுதி செயலாளர் சுரேஷ் மற்றும் வட்டச் செயலாளர் புகழேந்தி உடன் இருந்தார்