சிவகங்கை மாவட்டம், பாப்பாபட்டியில் ஆண்டியப்பனுக்கு சொந்தமான இடத்தில் செடிகளை அகற்ற ஜேசிபி வாகனம் பயன்படுத்தப்பட்டது. பணியின்போது,ஜேசிபி பக்கெட்டில் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருப்பது கண்டறியப்பட்டது.உடனே சிங்கம்புணரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு அலுவலர் சீ.பிரகாஷ் தலைமையில் வந்த வீரர்கள்,பாம்பை உயிருடன் மீட்டு, பிரான்மலை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அதை வனப்பகுதியில் விடுவித்தனர்.