கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலம் பிரிவு சாலையில் காவல்துறை வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த வாகனத்தில் பயணம் மேற்கொண்ட கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அலுவலக ஆய்வாளர் இளவரசன் உட்பட 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்