விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்துள்ள ஓமந்தூர் பகுதியில் செவ்வாய் கிழமை மாலை 6 மணி அளவில் திமுக செயல்வீரர் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமை தாங்கினார். விழுப்புரம் வடக்கு மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். இதனை மரக்காணம் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி ஏற்பாடு செய்தார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நிலத்திட்ட உதவிக்கு வழங்கப்பட்டது