ராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் தமிழ்மாறன், மீன்வளத்துறை ஆய்வாளர் கார்த்திக் ராஜா மீன்வளத் துறைக்கு சொந்தமான ரோந்து படகில் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்த நான்கு விசைப்படகு மீது வழக்கு பதிவு செய்த மீன்வளத்துறை அதிகாரிகள் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மீன்கள் மற்றும் மீன்பிடி வலைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.