திருப்பத்தூர் ஒன்றியம் புதுக்கோட்டை ஊராட்சி செளளூர் பகுதியில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை தங்கள் பகுதிக்கு ஒரு ரேஷன் கடை வேண்டும் என்பது இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி இடம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் எம்எல்ஏவின் தீவிர முயற்சியின் காரணமாக மாடப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் இன்று பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டது.