சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அண்டக்குடி ஊராட்சியில் அண்டக்குடி புதூரில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் தற்போது 15 குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை. மையத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் இல்லை.