திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் 12 வது புத்தகத் திருவிழாவில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கினார். இந்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 70 சதவிகிதம் நூலகத்திற்காக தான் கொடுத்துள்ளேன். நூலகத்தை திறன் மேம்பாட்டு மையமாகவும் மாற்றலாம் என்ற முயற்சியில் மாவட்டத்தில் 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான திறன் மேம்பாட்டு மையம் அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு உள்ளோம் என தெரிவித்தார்