காரைக்குடி 27 வது வார்டு பகுதி காமராஜர் நகர் சந்தன முத்துமாரியம்மன் கோயில் பகுதியில் செல்லும் கழிவுநீர் செல்லும் கால்வாய்கள் தூர் வாராததால் அடைப்பு ஏற்பட்டு மழை நீருடன் கழிவுநீரும் கலந்து வீடுகளுக்குள் புகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் தூர்வாராத நிலையில் அப்பகுதி பொதுமக்களுடன் 27 வது வார்டு அதிமுக கவுன்சிலர் பிரகாஷ் இணைந்து கழிவுநீர் கால்வாய் தூர் வாரும் பணியினை மேற்கொண்டனர்.