புழல் அறிஞர் அண்ணா நினைவு நகர் பகுதியில் கட்டிடம் கட்டுவதற்காக ராட்சத பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் நேற்று இரவு பெய்த கன மழையின் காரணமாக பள்ளத்தில் மழை நீர் தேங்கியதால் அருகே இருந்த மதில் சுவர் இடிந்து சேதமடைந்தது தொடர்ந்து அருகில் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பமும் சேதமடைந்ததால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது இதனை அடுத்து இன்று சேதமடைந்த இடத்தில் அப்பகுதி மக்கள் ஒன்றாக திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.