ஆம்பூர் அடுத்த பெரியகோமேஸ்வரம் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சோபனா கோவிந்தராஜ் கணவனை இழந்த இவரை ஏற்கனவே சொத்து பிரச்சனை காரணமாக கத்தியால் ஷோபனாவை தாக்கியதன் காரணமாக சோபனா அவருடைய தாய்வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் நிறுத்தி வைத்திருந்த கார் கண்ணாடியை சிலர் கற்களால் அடித்து உடைத்து உள்ளனர். இது தொடர்பாக இன்று காலை உமராபாத் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.