திண்டுக்கல் என்.எஸ்.நகர் அபிராமி நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ ஹரி ஓம் சிவசக்தி விநாயகர் திருக்கோவில். இந்த திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அங்கு உள்ள சிறிய சிவசக்தி விநாயகருக்கு பஞ்சமுக சிறப்பு அலங்காத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் அங்குள்ள உற்சவ விநாயகருக்கு சுருளி, ராமேஸ்வரம், காசி, காவேரி உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களில் இருந்து தீர்த்தங்கள் எடுத்துவரப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.