தூத்துக்குடி வெள்ளைப்பட்டி தருவை குளம் கடற்கரை சாலை பகுதி வழியாக இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் கடத்தப்படுவதாக கடலோர காவல் நிலைய ஆய்வாளர் பேச்சிமுத்துவிற்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து ஆய்வாளர் பேச்சிமுத்து தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர் .