திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஏலகிரிமலைக்கு வரலட்சுமி என்ற தனியார் பேருந்து சென்று கொண்டு இருந்த போது கீழே இருந்து 4 வளைவில் மேலே செல்லும் போது எதிரே காரில் வந்த வாலிபர்கள் மது மயக்கத்தில் வளைவில் திரும்பும் போது தனியார் பேருந்து மீது உரசி உள்ளனர். அதோடு நாங்க வந்தா வழி விட மாட்டியா? என்று தனியார் பேருந்து ஓட்டுநர் உசேன் என்பவரை காரில் தாக்கியதில் ஓட்டுநர் காயம் அடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவருக்கு தலையில் தையல் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதனால் காரில் வந்த 6 வாலிபர்களை ஏலகிரிமலை போலீசார் கைது செய்தனர்