சந்திர நகர் பகுதியை சேர்ந்த தேசிங்கு மகன் குரு ராகவேந்திரன் இவர் கடந்த 2014 ஆண்டு முதல் தற்போது வரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல இன்று காலை தனது இரு சக்கர வாகனத்தில் வந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தனது அலுவலகம் முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு பணிக்கு சென்று உள்ளார். இதனை அறிந்த மர்ம நபர் ஒருவர் சர்வசாதாரணமாக இருசக்கர வாகனத்தில் மற்றொரு சாவியை போட்டு இருசக்கர வாகனத்தை திருடி செல்கிறார். இதன் காட்சிகள் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவில் பதிவாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.