காந்திபுரம் பகுதியில் சில நன்னடத்தை தண்டனை கைதிகளால் நடத்தும் பெட்ரோல் பங்க் நல்ல முறையில் செயல்பட்டு வருவதன் தொடர்ச்சியாக, ஒண்டிப்புதூர் பகுதியில் இருக்கும் கிளைச் சிறையில் நேற்று கோழிக்கறி விற்பனை செய்வதற்காக சிக்கன் கடை திறக்கப்பட்டு உள்ளது. ஃப்ரீடம் சிக்கன் என்ற பெயரில் புதிதாக திறக்கப்பட்ட இந்த கடையில் கூட்டம் அலைமோதியது.