கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமால் மற்றும் கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி தங்கவேல் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.