கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரம் பகுதியில் கள்ளக்குறிச்சி மாவட்ட பெருந்திட்ட வளாகம் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அப்பணியினை இன்று கள்ளக்குறிச்சி பொறுப்பு அமைச்சரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார்.