வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட மேட்டுதெரு பகுதியில் புதிய நியாயவிலை கடையை திறப்பு தொடர்பாக அதிமுக திமுகவினருகிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கடும் சலசலப்பு கிடையை கூட்டுறவு துறை இயக்குனர் மீனாட்சி இன்று மாலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.