சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே தாழையூரில் வசிக்கும் பழனிவேல் மனைவி சுதா (39), வீட்டு வேலைக்குச் சென்றபோது, மரத்தருகே இருந்த கம்பியைப் பிடித்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த தேவகோட்டை தாலுகா காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.