வாணியம்பாடி நகர மக்களுக்கு கொடையாஞ்சி பாலாற்றிலருந்து ராட்சத பைப் மூலமாக சிமெண்ட் சாலையின் நடுவே அமைக்கப்பட்ட பைப்புகள் அவ்வப்போது உடைவதால் அதனை நகராட்சி நிர்வாகம் பழுதுபார்க்கும் பொழுது சாலையில் அதிகஅளவு பள்ளம் ஏற்படுவதால் பொதுமக்களும், மாணவர்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகுவதாகவும் தற்போது புதிய பைப் மாற்றுவதற்கு நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொடையாஞ்சி கிராம மக்கள் இன்று மாலை நகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தனர்.