பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த 6ந்தேதி கைது செய்யப்பட்ட ஒரு படகையும் அதிலிருந்து பத்து மீனவர்களையும் இரண்டாவது முறையாக இன்று இலங்கை நீர்கொழும்பு அருகே உள்ள வெளிச்சரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது வழக்கு விசாரித்த நீதிபதி மீனவர்கள் 10 பேரையும் வரும் 25ந் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் 10 பேரும் வெளிச்சரா முகாமில் மீண்டும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்