திருவள்ளூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது அத்தகைய நீதிமன்றத்தில் மின்னஞ்சல் முகவரிக்கு இன்று மாலை மர்ம நபர் ஒருவர் நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார் இது தொடர்பாக வெடிகுண்டு நிபுணர்கள் நீதிமன்ற நுழைவாயில் முதல் நீதிபதி அமர்வு மையங்கள் அறைகள் என அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்பநாய் வைத்து திடீர் சோதனை மேற்கொண்டதில் அது புரளி என தெரிய வந்தது