விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் காவல் துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இச்சிலைகளின் பாதுகாப்பு பணியில் எஸ்பி தலைமையில் கூடுதல் எஸ்பி, டிஎஸ்பிகள் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் என 515 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என எஸ்பி அறிவிப்பு.