திருவாடானை அருகே மாவிலங்கை கிராமத்தில்கருப்பையாவை கொலை செய்ததாக ஒத்துக் கொண்டு மாசிலாமணி திருவாடானை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். கொடைக்கான காரணம் குறித்து அவரிடம் விசாரித்ததாகவும் அப்போது மாசிலாமணி தானும் கருப்பையாவும் நெருங்கிய நண்பர்கள் எனவும் தனக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறிய நிலையில் இதுவரை திருமணம் செய்து வைக்கவில்லை எனவும் அதனால் ஆத்திரத்தில் கம்பால் அடித்து கொலை செய்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளதாக சொல்லப்படுகிறது.