திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருப்பத்தூர் அடுத்த மிட்டூர் ஊராட்சி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சென்றாயன் வயது 75 என்பவர் தனது மருமகள் தன்னை அடித்து உதைத்து கொடுமைப்படுத்துவதாக புகார் அளிக்க வந்தார். அப்பொழுது ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திடீரென சென்றாயன் மயக்கம் அடைந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் நகர போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.