பாரிமுனை தம்பு செட்டி தெருவில் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் பாஜக மோடி அரசு தேர்தல் ஆணையத்தின் துணையோடு நடத்தும் வாக்கு திருட்டுக்கு எதிரான மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை துவங்கி வைத்து பேசினார். பொதுசெயலாளர் வாசு பகுதி தலைவர்கள் மாவட்டத் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்