சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் வாக்களிப்பதின் கடமை, சேவை மனப்பான்மை, சிறந்த நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கு; பள்ளியில் இளைஞர் பாராளுமன்ற தேர்தல் கடந்த 25 வருடங்கள் நடைபெற்று வருகிறது. 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டனர். பிரதமர், துணை பிரதமர், சபாநாயகர், உள்பட 12 பதவிகளுக்கு 88 பேர் மனு தாக்கல் செய்தனர். 58 மாணவர்கள் 12 பதவிகளுக்கு போட்டியிட்டனர். விரலில் மை வைத்த பின்பு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்