செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அடுத்த தென்மேல்பாக்கம் கிராமத்தில் காப்புக் காடுகளுக்கு இடையே தனியாருக்கு சொந்தமான மருத்துவ கழிவுகள் எரியூட்டும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு சென்னை பெருநகர காவல்,தாம்பரம்,ஆவடி மாநகர காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் இங்கு கொண்டு வந்து எரித்து அழிப்பது வழக்கம்,