சிவகாசி அருகே புதுக்கோட்டையில் பழமையான பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சி அம்மன் விசுவநாதர் சுவாமி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதிகாலை முதல் கோ பூஜை கணபதி பூஜை யாகசாலை பூஜைகள் நடைபெற்றன பின்னர் கோபுரத்தின் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது கும்பாபிஷேக விழாவில் உள்ளூர் வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டனர்.