சின்னாளப்பட்டி பிரச்சாரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்கவும், மதுரை விமான நிலையத்திற்கு பெயர் சூட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். இதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டப்பட்டால் தென் மாவட்டத்தில் கலவரம் ஏற்படும் என கருத்து தெரிவித்தார். இந்த கருத்திற்கு எதிராக திண்டுக்கல் பார்வர்ட் பிளாக் கட்சியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் டிடிவி தினகரன் புகைப்படத்தை எரித்தனர்