சிங்கம்புணரி நகர் மற்றும் எஸ்.வி.மங்களம், பிரான்மலை, காளாப்பூர் போன்ற பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கடும் வெப்பத்தால் வாடிய மக்களுக்கு குளிர்ச்சியான சூழல் கிடைத்தது. மூன்று நாட்களாக பெய்யும் மழையால் கடலை, மிளகாய், வெண்டிக்காய், உளுந்து, கத்தரி போன்ற கோடை பயிர்கள் பயனடைந்தன. வெப்பத்தால் வாடிய பயிர்களுக்கு இம்மழை வரப்பிரசாதமாக அமைந்தது, விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்தது.