கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கீரப்பாளையம் பகுதியில் இருந்து 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கடந்த 31ஆம் தேதி நெய்வேலி செல்லும் தனியார் பேருந்தில் ஏறி உள்ளார் . இந்த நிலையில் அதே தனியார் பேருந்தில் முகமூடி அணிந்த மூன்று பெண்களும் ஏரி உள்ளனர் தனியார் பேருந்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்த நிலையில் முகமூடி அணிந்த மூன்று பெண்களும் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டியை சுற்றி நின்று கொண்டு மூதாட்டி அணிந்திருந்த ஆறு பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்து உள்ளனர்.