தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கர்த்தாரஅள்ளியில் புதியதாக துவங்கப்பட்ட சுங்க சாவடியில் சுங்க கட்டணத்தில் விலக்கு அளிக்க கோரி தமிழக வெற்றிக் கழகத்தினர் 100க்கும் மேற்பட்டோர் ஒன்றிய செயலாளர் குமார் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலக்கோடு சுற்றி உள்ள பகுதிகளுக்கு சுங்க கட்டணத்தில் விலக்கு அளிப்பதாக தெரிவித்திருந்ததாகவும், தற்போது வாக்குறுதியை மீறி சுங்க கட்டணத்தில் விலக்கு அளிக்க கோரி சாலையில் அமர்ந்து போராடினர்.