சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி ஶ்ரீ கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி வைபவம் விமர்சையாக நடைபெற்றது. காலை 4:30 மணிக்கு நடை திறந்து, மூலவர் தங்க கவசத்தில் காட்சியளித்தார். உற்சவர் வெள்ளி பல்லக்கில் புறப்பாடாகி, திருக்குளத்தில் அபிஷேகம், தீபாராதனை நடந்தன. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களுடன் அங்குசதேவரை மூழ்கி தீர்த்தவாரி நடத்தினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.