திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, சிப்காட் தொழிற்பேட்டை பகுதிகளில் அமைந்துள்ள தீயணைப்பு நிலையங்களில் தமிழ்நாடு தீயணைப்பு டிஜிபி சீமா அகர்வால் ஆய்வு மேற்கொண்டார். தீயணைப்பு நிலையங்களில் உள்ள தீயணைப்பு வீரர்கள் எண்ணிக்கை, வருகை பதிவேடு, தீயணைப்பு உபகரணங்கள் இருப்பு, பயன்பாடு குறித்து நிலைய அலுவலர்களிடம் டிஜிபி கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சீமா அகர்வால் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ததாக கூறினார்