அரியலூர் மாவட்டம் சொக்கலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரகு. இவர் திருப்பூரில் பேப்பர் கம்பெனி நடத்தி வருகிறார். இந்நிலையில் தனது சொந்த ஊரான சொக்கலிங்கபுரம் கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்றுள்ளார். பின்னர் வீட்டை பூட்டிவிட்டு திருப்பூர் சென்று விட்டார். இந்நிலையில் பீரோவில் இருந்த 22 பவுன் நகைகள் மற்றும் 2 லட்ச ரூபாய் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள், 60 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை மர்மநபர்கள் கொள்ளை.